© 2019 by DNB On Call Services Private Limited

android-app-play.png
PAYMENT MODE
AREAS COVERED

Madurai

Dindigul

Karur

Trichy

Pudukottai

Namakkal

AREAS COVERED

Madurai

Dindigul

Karur

Trichy

Pudukottai

Namakkal

Popular Services

Plumbing

Electrical

Cleaning

Carpentry

Gardening

Maintenance

Popular Services                                                PlumbingElectrical | Rain-water Harvesting | Gardening | Painting

House need Services                                        PlumbingElectrical | Carpentry | Gardening  | Packers & Movers

Cleaning                                                             Over-head water tank cleaning |  Move out cleaning | Deep cleaning | Kitchen deep cleaning |

                                                                             Bore-well Motor cleaning |  Rain water storage tank cleaning 

Pest Control                                                      Bed bug control |  Cockroach control | Termite control | Rodent control | Mosquito control

Download APP

Retail Partnership

நீர் மேலாண்மை - மழை நீர் சேமிப்பு

Updated: Aug 30, 2018




நதியென்பது நீர் கொண்ட பெருநிதி..

நிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பார்கள்.

தாகத்தின் வேட்கை தொண்டையை கவ்வ கிடைக்கும் ஒரு சொட்டு நீர் வானோர் சொன்ன அமுதத்தின் ஒப்பாகும்.


மிக சமீபத்தில் படித்த ஒரு கவிதை நீர் என்ற வார்த்தையை சொல்லாமல் நெஞ்சை தொட்டது


"ஒரு காலத்தில்
என் தாத்தா
ஆற்றில் பார்த்தார்..
என் அப்பா
ஊற்றில்
பார்த்தார்..
நான்
கிணற்றில் பார்த்தேன்..
என் மகன்
பாட்டிலில் பார்க்கிறான்..
என்
பேரன்?"

இப்படி முடிந்தது அந்த பெயர் தெரியாத கவிஞனின் கவிதை.


பண்டைத்தமிழ் காப்பியங்களாகட்டும்,மன்னர்களின் மகோன்னதத்தை சொல்லவரும் பாயிரங்களாகட்டும் யாவும் நீரை மையப்படுத்தியும் போற்றுவதாகவுமே இருந்தது.


உள்நாடுகளுக்குள்ளேயேயும் ,கலிங்கமும் கடல்கடந்தும் சென்று போரிட்ட வரலாறுகளின் எச்சங்களில் தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது பழந்தமிழ் அரசர்களின் பெருமையை...


ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக இன்றும் பார்ப்போர் பிரமிக்க நதியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கல்லணை மட்டுமே கரிகால் சோழனை நினைக்க வைக்கிறது.


பூமியைக்கீறிப் பார்த்துன்வெளிவந்த சிந்துசமவெளி,மொகஞ்சதாரா போன்ற நாகரீகங்களில் கூட நீருக்கான வரத்துவாரிகளையும்,கழிவுநீர் மேலாண்மையும் வியக்க வைப்பதாகவே உள்ளது. நதியின் நீர் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவின் ஒரு அங்கமாகவே விளையாடியிருக்கிறது. ராமாயண காப்பியத்தில் கடல் தன் மேல் போட்ட கற்களை தெப்பமாக்கி நாயகனுக்கு நன்றியுள்ளதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் இன்றைய கேள்வி.


நீர்மேலாண்மை என்பது நீரைப் பெறுவதைக்காட்டிலும் பெறும் நீரை போற்றிக்காப்பதிலேயே இருக்கிறது.


கண்மாய்களும், குளங்களும், ஊருணிகளும், ஏரிகளும், கிணறுகளுமாய் விரவிக்கிடந்த நாட்டின் பரப்புகள் எப்போது வீட்டின் மனைகளாக மாறத்தொடங்கியதோ அப்போதே நாம் நீருக்கு நீத்தார் காரியம் செய்யத்தொடங்கி விட்டோம்.


வான் தரும் வரத்தை வீணுக்கு விட்டுவிட்டு வார்த்தைகளில் வாதம் செய்துகொண்டிருக்கிறோம். உலகின் எழுபது சதவீதம் தண்ணீர் என்றாலும் நன்னீருக்கான ஆராய்ச்சிகள் சொல்லும்படியாக இல்லாமல் போவது கூட வியாபார நரிகளின் மூளைதான்.


அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பின்னெப்போதேனும் உலகப்போர் மூளுமெனில் அது நீருக்கானதாக இருக்கும் என்னும் கூற்று உற்று நோக்கத்தக்கது. அதிர்ஷ்டவசமாக நமக்கு நீர்மேலாண்மை பற்றிய வரலாற்று அறிவும், நுட்பமும் இருந்தும் அதனை கடைபிடிக்காதது கடினமான வேதனை.


மழையின் மிகுதியில் பெறுக்கும் நீர் ஒவ்வொரு குளமும் நிறைய நிறைய மற்றொன்றை நிறைக்கும் படியும் இறுதியாக சமுத்திரத்தை சேரும்படியும் வரைபடத்தை உற்றுப்பார்ப்போமெனில் மனித உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்புகள் போலவே ஓடிக்கொண்டிரும் நீரின் தடங்கள்.


நதிகள் இயற்கையாகவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவனுள்ளது. மனிதன் தன் சுயநலத்துக்காக அணைகளைக்கட்டிகொண்டான்.


நதியின் கிளைகளில் நீரைவார்த்து நிலத்தின் நிலத்தை ஈரமாகவே வைத்திருந்தால் அணைகள் அநாவசியம் தான். நிலத்துக்கு எப்படி நன்னீர் அவசியமோ அதைப்போலவே கடலின் முகத்துவார உயிர்களுக்கும் நன்னீர் அவசியமென்பதை சுயநலக்கார மனிதன் மறந்துவிட்டான். அணைகளைக்கட்டி அளவுகள் குறிப்பதும் வழக்குகள் நடப்பதும் போராட்டங்களும் நதிகள் போட்ட விதிகளல்ல. நாமே நம் தலைமீது போட்டுக்கொண்ட மண்.


நீரின் கோபம் அடங்குதலில் இல்லை..அவை ஆர்ப்பரிக்கும் போது எதனையும் உடைக்கும் வல்லமை மிக்கது. வெள்ளம் வரும் நாள்களில் வேடிக்கை பார்த்துவிட்டு வெயில் வரும் காலங்களில் குடங்களுடன் போராடுவது மனிதத்திமிரன்றி வேறென்ன?


ஒற்றை ஏரியான வீராணம் ஏரி அன்றைய சென்னைக்கே தாகம் தணித்தது என்றால் அது போல் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தமிழகத்தில் உண்டு.


நீரின் மிகுதியில்லாத இஸ்ரேல் இன்று பசுமைக்காடாக மாறிவருகிறது.

ஜோர்டான் ,பாலஸ்தீனம் போன்ற நாடுகள் மெல்ல விவசாயம் நோக்கி நகர்கிறது.


இவை எல்லாமே அந்த நாடுகளின் நீர் மேலாண்மையாலேயே நடந்தேறும் அற்புதங்கள். நல்ல நீரே கிடைக்க வாய்ப்பில்லாத சிங்கப்பூரின் நீர் சுழற்சி முறைகள் உலக நாடுகள் பின்பற்றப்படவேண்டியவை.


ஊரின் தலைவரின் நிலத்துக்கு முதலில் நீர்பாய்ச்சிவிட்டு கடைசி மனிதனுக்கு வருவது ஜனநாயகத்தின் அவலம் என்றால் வயல்களின் நீளத்தைவிட வரப்புகளின் அகலமும் அப்படித்தான்.


தனிமனித சிந்தனைக்கேற்ற வீம்பான விவசாயத்தை விட்டுவிட்டு கூட்டுறவு முறையிலான பண்ணை விவசாயம் நீரின் தேவையை பெருமளவு குறைக்க வல்லது. நீரின் பங்கீட்டை நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனத்தில் அளிக்கும் போது சிக்கனமாகிறது நீர்.


நீரின் தேவை அதிகமில்லாத நாட்டின் பாரம்பரிய சிறுதானியங்களை மீண்டும் மீட்டெடுப்பது தண்ணீருக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் நல்லது.


இப்படி மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் நீரின் துணை அவனின் கடைசி நிமிடத்தில் குடத்தின் நீராகவும் சுற்றிவந்து உடைபடுகிறது..


அந்த மகோன்னதமான தண்ணீரை,நாம் மிக அலட்சியமாகவும் ,மேலாண்மக் செய்வதில் அக்கறையில்லாமலும் இப்படியே தொடர்ந்து இருப்போமெனில் ..


அது நீருக்கு நாம் செய்யும் இறுதிமரியாதையாகவே மாறிவிடும் ஆபத்திருப்பது இனியேனும் அறிந்து நடந்து கொள்ளவேண்டுமென்பதே இப்போதைய அவசியமாகும்.


#Rainwater-harvesting #நீர்மேலாண்மை



Maintaining your premises can be a tough job! Our On-time Home / Commercial maintenance service assists you with on-ground experts who provide you with the best customized solutions in the committed time for a hassle-free experience! Booking qualified professional for rainwater-harvesting using DNB.Services App reduce your work on planning and implementing.

368 views